சினிமா

குட் பேட் அக்லி படத்தின் ப்ரீமியர் ஷோ கேன்சல்!! வெளியான திடுக்கிடும் காரணங்கள்..

Published

on

குட் பேட் அக்லி படத்தின் ப்ரீமியர் ஷோ கேன்சல்!! வெளியான திடுக்கிடும் காரணங்கள்..

ஆதிக் ரவிச்சந்திரன் – அஜித் குமார் கூட்டணியில் உருவாகியிருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. இப்படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, சுனில், பிரசன்னா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சுமார் ரூ. 250 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இப்படம், உலகளவில் ரூ. 500 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.படத்தை பிஸினஸ் செய்வதற்காக, 20 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் கட் செய்து திரையுலகில் உள்ள முக்கிய நபர்களுக்கு திரையிடப்படும். அப்படி குட் பேட் அக்லி படத்தையும் படக்குழு திரையிட்டுள்ளனர்.அப்போது படத்தை பார்த்த முக்கிய நபர்கள் மிரண்டு போனதாக தகவல் வெளியாகியது. இந்நிலையில் குட் பேட் அக்லி படத்தின் ப்ரீ ரிலீஸ் குறித்த தகவலை பத்திரிக்கையாளர் பிஸ்மி தெரிவித்துள்ளார்.ஏப்ரல் 10 ரிலீஸாகவுள்ள குட் பேட் அக்லி படத்தினை அதற்கு முந்தின நாள் ஏப்ரல் 9 ஆம் தேதி ப்ரீ ரிலீஸ் காட்சிகளை ஒளிப்பரப்பு செய்யவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், அதில் நடைமுறை சிக்கல்களை படக்குழுவினர் தயாரிப்பாளருக்கு சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.முதல் நாளில் வரும் ரசிகர்கள் படத்தை வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிடுவதால் படத்தின் எதிர்பார்ப்பு குறையும். அதனால் ப்ரீ ரிலீஸ் இல்லாமல் 10 ஆம் தேதி முதல் காட்சியையே வெளியிடலாம் என்று கூறியுள்ளனர்.அன்றைய தினம் மகாவீர் ஜெயந்தி என்பதால் 9 மணி காட்சியை ஒளிப்பரப்ப தியேட்டர்காரர்கள் அரசிடம் கோரிக்கை விடுக்கலாம் என்ற காரணமும் இருக்கலாம் என்று பிஸ்மி தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version