விளையாட்டு

சி.எஸ்.கே. என் அணி.. சக்கர நாற்காலியில் நான் இருந்தாலும்.. சி.எஸ்.கே. குறித்து தோனி நெகிழ்ச்சி பேச்சு!

Published

on

சி.எஸ்.கே. என் அணி.. சக்கர நாற்காலியில் நான் இருந்தாலும்.. சி.எஸ்.கே. குறித்து தோனி நெகிழ்ச்சி பேச்சு!

2025 ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக விளையாட உள்ளது. அந்த போட்டிக்கு முன்னதாக சிஎஸ்கே அணியின் மூத்த வீரர் தோனி ஜியோ ஹாட்ஸ்டாருக்கு பேட்டியளித்தார்.ஓய்வு குறித்த பேச்சு வைரலாகி உள்ள நிலையில் ஜியோஹாட்ஸ்டார் நேர்காணலில் இதை தோனி கூறியுள்ளார். அதில் “சென்னை அணிக்காக நான் எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் விளையாடலாம். ஏனென்றால், அது என்னுடைய அணி. நான் வீல் சேரில் அமர்ந்திருந்தாலும், அவர்கள் என்னை இழுத்துச் செல்வார்கள்” என்று நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். அவரது பேச்சு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2008 முதல் விளையாடி வருகிறார் தோனி. 2008 முதல் 2023 வரை சுமார் 15 ஆண்டு காலம் அவர் சிஎஸ்கே அணியின் கேப்டனாக செயல்பட்டார். 2024 ஆம் ஆண்டு முதல் அவர் கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.ஆனால், தொடர்ந்து சிஎஸ்கே அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக அவர் இடம் பெற்று இருக்கிறார். 43 வயதான நிலையிலும் அவர் சிஎஸ்கே அணிக்காக தற்போது விளையாட இருக்கிறார்.சென்னை சூப்பர் கிங்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ள 2025 ஐபிஎல் லீக் போட்டி இன்று மார்ச் 23 அன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த போட்டியில் தோனியின் பேட்டிங்கை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version