விளையாட்டு

IPL 2025, CSK vs MI LIVE Cricket Score: ரோஹித் சர்மா, ரிக்கெல்டன் விக்கெட்டை வீழ்த்தி கலீல் அகமது சிறப்பான பந்துவீச்சு

Published

on

IPL 2025, CSK vs MI LIVE Cricket Score: ரோஹித் சர்மா, ரிக்கெல்டன் விக்கெட்டை வீழ்த்தி கலீல் அகமது சிறப்பான பந்துவீச்சு

IPL 2025, CSK vs MI Live Updates: 18-வது ஐ.பி.எல் 2025 தொடர் கொல்கத்தாவில் நடப்பு சாம்பியன் கே.கே.ஆர் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இடையே முதல் போட்டியுடன் தொடங்கியது. இந்த போட்டியில், கொல்கத்தா அணியை வீழ்த்தி பெங்களூரு வெற்றி பெற்றது. ஆங்கிலத்தில் ஐ.பி.எல் 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் லைவ் அப்டேட்ஸ்:இந்த ஐ.பி.எல் தொடரில் இன்று (23.03.2025) 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் இடையே ஐதராபாத்தில் நடைபெற்ற முதல் போட்டியில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று (23.03.2025) இரவு 7.30 மணிக்கு பலப் பரீட்சை நடத்துகின்றன. இரண்டு அணிகளும் பலம் வாய்ந்த அணிகள் என்பதால் எந்த அணி வெற்றி பெறும் என்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விவரம்:ருதுராஜ் கெய்க்வாட், ஆண்ட்ரே சித்தார்த், டெவான் கான்வே, ராகுல் திரிபாதி, ஷேக் ரஷீத், எம்.எஸ் தோனி, ரச்சின் ரவீந்திரா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், சாம் கர்ரன், சிவம் துபே, ராமகிருஷ்ணா கோஷ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.மும்பை இந்தியன்ஸ் அணி விவரம்:ருதுராஜ் கெய்க்வாட்(கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, தீபக் ஹூடா, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, சாம் குர்ரான், எம்.எஸ் தோனி(விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், நூர் அகமது, நாதன் எல்லிஸ், கலீல் அகமது.முதல் ஓவரில் ரோஹித் சர்மாவை டக் அவுட் ஆக்கிய கலீல் அகமது சிறப்பாக பந்துவீசி, இரண்டாவது ஓவரில் ரிக்கெல்டன் விக்கெட்டை வீழ்த்தினார். 7 பந்துகளில் 13 ரன் எடுத்த ரிக்கெல்டன் போல்ட் அவுட் ஆனார். மும்பை இந்தியன்ஸ் 2.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 21 ரன் எடுத்துள்ளது. வில் ஜேக்ஸ் – சூர்யகுமார் யாதவ் விளையாடி வருகின்றனர்.மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா, ரிக்கில்டன் தொடக்க வீரர்களக களமிறங்கினர். முதல் ஓவரை கலீல் அகமது சிறப்பாக வீசினார். 4வது பந்தில் ரோஹித் சர்மா டக் அவுட் ஆனார்.ருதுராஜ் கெய்க்வாட்: நாங்கள் முதலில் பந்து வீசுகிறோம். இந்த மைதானத்தில் முதல் முறையாக விளையாடுகிறோம், எனவே அது எப்படி விளையாடும் என்று எங்களுக்கு உண்மையில் தெரியாது. எனவே நாங்கள் அதற்கேற்ப மாறி துரத்த விரும்புகிறோம். பேட்டிங் செய்ய ஒரு நல்ல விக்கெட்டாகத் தெரிகிறது. நூர், எல்லிஸ், ரச்சின் மற்றும் சாம் கரன் ஆகியோர் வெளிநாட்டு வீரர்கள் உள்ளனர்.சூர்யகுமார் யாதவ்: நான் முதலில் பேட்டிங் செய்வதில் நன்றாக உணர்கிறேன். எங்கள் சொந்த ஊரில் ஒரு அழகான முகாம் இருந்தது, நாங்கள் 2-3 நாட்களுக்கு முன்பு இங்கே இருந்தோம். சாதனைகளின் அடிப்படையில் இருவரும் பலமானவர்கள். இது ஒரு நல்ல ஆட்டமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். ரிக்கிள்டன், ஜாக்ஸ், சாண்ட்னர் மற்றும் போல்ட் ஆகியோர் நான்கு வெளிநாட்டு வீரர்கள் உள்ளனர்.ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையேயான போட்டியில்,  டாஸ் வென்ற சி.எஸ்.கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தார். அதன்படி மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் செய்ய உள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version