பொழுதுபோக்கு

அனிமேஷன் மோனாவுக்கு டஃப் கொடுப்பாரோ? பிரியங்கா நல்காரி ரீசன்ட் க்ளிக்ஸ்

Published

on

அனிமேஷன் மோனாவுக்கு டஃப் கொடுப்பாரோ? பிரியங்கா நல்காரி ரீசன்ட் க்ளிக்ஸ்

சன் டிவியில் ஒளிபரப்பான “ரோஜா” என்ற ஹிட் சீரியலில் நடித்து புகழ்பெற்ற நடிகை பிரியங்கா நல்காரி, இந்த சீரியல் மூலம் ஏராளமான ரசிகர்களைப் பெற்றிருந்தார்.ரோஜா சீரியலில் இவர் நடித்த ரோஜா கேரக்டரே இவரின் அடையாளமாகவும் மாறியது. இந்த சீரியல் கடந்த 2022-ல் முடிவடைந்தது.பிரியங்கா அடுத்து ஜீ தமிழின் சீதாராமன் சீரியலில் நாயகியாக நடித்து வந்தார்.இந்த சீரியலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.ஒரு கட்டத்தில் சீதாராமன் சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்த பிரியங்கா, தனது காதலவர் தொழிலதிபர் ராகுல் வர்மாவை திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்கு பின் மலேசியாவில் குடியேறிய பிரியங்கா, இனி சீரியலில் நடிக்க மாட்டார் என்று தகவல் வெளியாக நிலையில்,ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் “நள தமயந்தி” என்ற தமிழ் சீரியலின் மூலம் ரீ-என்டரி கொடுத்தார்.அதே சமயம் சமூகவலைதளங்களில் தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் பதிவிட்டு வந்தார். இந்த பதிவுகள் இணையத்தில் வைரலாக பரவியது.தற்போது ரோஜா 2 சீரியலில் நடித்து வரும் நடிகை பிரியங்கா நல்காரி மோனா படத்தில் வரும் கேரக்டர் போன்ற கெட்டப்பில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version