பொழுதுபோக்கு

மருமகனை கடத்திய மாமியார்: கணவனை விரட்டிய மனைவி; ஜீ தமிழ் சீரியலில் இன்று!

Published

on

மருமகனை கடத்திய மாமியார்: கணவனை விரட்டிய மனைவி; ஜீ தமிழ் சீரியலில் இன்று!

கடத்தப்பட்ட மகேஷ்.. கார்த்திக் மீது பழி போடும் ரேவதி, காத்திருக்கும் திருப்பம் என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்கார்த்திகை தீபம் சீரியலின் வெள்ளிக்கிழமை எபிசோடில் சாமுண்டீஸ்வரி ராஜராஜனிடம் ட்ரைவர் தான் மாப்பிள்ளை என சொல்லிய நிலையில் இன்று, ரேவதி மணமேடை ஏற மாப்பிள்ளையை அழைத்து வர சொல்கின்றனர். மாயா மகேஷை கூப்பிட போக அவன் காணாமல் போன விஷயம் தெரிய வருகிறது.மறுபக்கம் ராஜராஜன் அம்மா பரமேஸ்வரியிடம் நான் சாமுண்டீஸ்வரி கிட்ட சொல்லி பார்த்தேன். அவ கேட்குற மாதிரி தெரியல என்று சொல்கிறாள். இதனை தொடர்ந்து மகேஷ் காணவில்லை என்ற விஷயம் தெரிய ரேவதி, சந்திரகலா ஆகியோர் அதிர்ச்சி அடைகின்றனர். ரேவதி மகேஷ் காணாமல் போக ட்ரைவர் தான் காரணம் என்று சொல்கிறாள். ஆனால் சாமுண்டீஸ்வரி அதுக்கு வாய்ப்பு இல்ல.. இதுக்கு வேறொருத்தர் தான் காரணம் என சிவனாண்டியை பிடித்து கேள்வி கேட்கிறாள். ஆனால் அவன் எனக்கு எதுவும் தெரியாது என சொல்கிறான்.அடுத்ததாக மகேஷ் குடோனில் அடைத்து வைக்கப்பட்டு இருக்க ரவுடிகள் சாமுண்டேஸ்வரிக்கு போன் செய்து மேடம் நீங்க சொன்ன மாதிரியே அவனை கடத்திட்டோம் என்று சொல்கின்றனர். இங்கே மாயா மகேஷை காணவில்லை என போலீசில் புகார் அளிக்கலாம் என சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கபோவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.சௌந்தரபாண்டி செய்த சூழ்ச்சி.. சண்முகத்தை விரட்டி விட்ட பரணி – அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்அண்ணா சீரியலின் வெள்ளிக்கிழமை எபிசோடில் சண்முகம் பரணி பீச்சுக்கு சென்றிருக்க பெரிய அலை பரணியை கீழே தள்ளிய நிலையில் இன்று, பரணி கீழே விழ சண்முகம் அவளுக்கு என்னாச்சு என்று அதிர்ச்சி அடைகிறான். இதையடுத்து இருவரும் பீச்சில் ஓடி பிடித்து விளையாடி நெருக்கமாகின்றனர். அதன் பிறகு இருவரும் ரிசார்ட்டில் தங்க பரணி தூங்கி கொண்டிருக்க அவள் பக்கத்தில் அமர்ந்து அவளையே ரசித்தப்படி இருக்கும் சண்முகம் நான் இங்க வந்ததே உன்னோட சநதோஷமாக இருக்க தான். நமக்குள்ள நடக்க வேண்டியது நடந்து நீ கர்ப்பமாகிட்டா அமெரிக்கா போக மாட்ட என்று சொல்கிறான்.உடனே சௌந்தரபாண்டி துக்கத்தில் இருந்து அலண்டு எழுந்து கொள்ள இது அவருடைய கனவு என தெரிய வருகிறது, உடனே பரணிக்கு போன் செய்து எங்க இருக்க என்று விசாரிக்க அவள் ஹோட்டலில் இருப்பதாகவும் சண்முகம் வெளியே சென்றிருப்பதாகவும் சொல்கிறாள். சௌந்தரபாண்டி அவன் அங்க வந்ததே உன்னை கர்ப்பமாக்க தான்.. அப்படி நீ கர்ப்பமாகிட்டா அமெரிக்கா போக முடியாது என்று சொல்ல பரணி அதிர்ச்சி அடைகிறாள். இதையடுத்து சண்முகம் மல்லிகை பூவுடன் வர பரணி அவனிடம் கோபப்படுகிறாள். நீ அதுக்காக தானே வந்திருக்க என ஆவேசப்பட சண்முகம் புரியாமல் நிற்கிறான்.தனியா வந்த எனக்கு தனியாவே ஊருக்கு வர தெரியும்.. நீ கிளம்பு என சொல்ல சண்முகம் முதலில் ஊருக்கு கிளம்புகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.துளசிக்கு ஷாக் கொடுத்த வெற்றி.. நோட் செய்த அஞ்சலி, நடந்தது என்ன? கெட்டிமேளம் இன்றைய எபிசோட் அப்டேட்கெட்டிமேளம் சீரியலின் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் வெற்றி கையில் கட்டுடன் லட்சுமி வீட்டிற்கு வந்த நிலையில் இன்று, வெற்றி கட்டுடன் வந்ததை பார்த்து என்னாச்சு என்று விசாரிக்க கீழே விழுந்து அடிபட்டு விட்டதாக சொல்கிறான். துளசியை தனியாக வர சொல்லி கண்ணை காட்ட இதை அஞ்சலி கவனிக்கிறாள்.பிறகு வெற்றி துளசியிடம் உங்களுக்கு என் மேல கோபம் இருந்தா நீங்களே என்னை அடித்து சொல்லி இருக்கலாமே.. உங்க பேரை சொல்லி தான் ஒருத்தன் என்னை இப்படி பண்ணிட்டு போய்ட்டான். இனிமே என்னை நீங்க தான் பார்த்துக்கணும். நீங்க தான் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகணும் என்று சொல்கிறான். இல்லனா வீட்டில் உண்மையை சொல்லி விடவா என்று கேட்க துளசி வேண்டாம் என்று சொல்கிறாள். அடுத்து மறுபக்கம் ஜெகன் மற்றும் மோனிகா ஆகியோர் மீனாட்சிக்கு போன் செய்து தீபாவளி வாழ்த்து சொல்லி ப்ராஜக்ட் குறித்து பேசுகின்றனர்.மீனாட்சி மாமா கிட்ட பேசுங்க என்று சொன்னதும் ஜெகன் ஈஸ்வர மூர்த்திக்கு போன் செய்ய அவர் பி.ஏ-வை திட்டுவது போல் ஜெகனை திட்டி விடுகிறார். அடுத்து ரேவதி பூ கொண்டு போகும் போது பைக்கில் ஒருவன் இடித்து தள்ளி விட்டு செல்கிறான். இதனால் அவளுக்கு கையில் காயம் ஏற்படுகிறது, முருகன் அவளை அழைத்து சென்று உட்கார வைத்து மறுத்து போட்டு விட்டு அவளது கடையையும் சேர்த்து பார்த்து கொள்ள ரேவதிக்கு முருகன் மீது காதல் உருவாக தொடங்குகிறது.இதனை தொடர்ந்து முருகன் தனது முதல் மாச சம்பளத்தை மொத்தமாக கொண்டு வந்து லட்சுமியிடம் கொடுத்து ஆசிர்வாதம் வாங்க ரகுராம் வழக்கம் போல் பெரிய சம்பளம் என எகத்தாளமாக பேச சிவராமன் உன்னை ஏசுறவங்க முன்னாடி எல்லாம் நீ வாழ்ந்து காட்டணும் என பதிலடி கொடுக்கிறான். அடுத்து முருகன் லட்சுமியிடம் இருந்து கொஞ்ச பணத்தை வாங்கி சென்று அதை பாட்டியிடம் கொடுத்து காசிக்கு போக சேர்த்து வைக்கும் உண்டியலில் போட சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version