சினிமா

உடல்நலக் குறைவால் காலமான பிரபல நடிகர்…!–சோகத்தில் ஆழ்ந்த இந்திய திரையுலகு…!

Published

on

உடல்நலக் குறைவால் காலமான பிரபல நடிகர்…!–சோகத்தில் ஆழ்ந்த இந்திய திரையுலகு…!

தமிழ் சினிமா உலகில் துணை நடிகர் மற்றும் கராத்தை நிபுணராக பல ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்தவர் ஷிகான் ஹுசைனி. இவர் உடல்நலக் குறைவால் இன்று அதிகாலை மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தகவல் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சமீபகாலமாக அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததாகவும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது. இன்றைய தினம் அவரது உடல் நிலை மிகவும் பாதிப்படைந்து கொண்டதால் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. ஷிகான் ஹுசைனி பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு கராத்தை, வில்வித்தை மற்றும் நெஞ்சழுத்த பயிற்சி என்பவற்றை வழங்கியவர். இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல் பல சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்கு வழிகாட்டியாகவும் பணியாற்றியுள்ளார்.அவர் மரணம் அடைந்த தகவல் வெளியாகிய சில மணி நேரங்களிலேயே சமூக வலைத்தளங்களில் பரவியதுடன் ரசிகர்கள் அனைவரும் அவருக்கு ஆழ்ந்த இரக்கத்தையும் தெரிவித்து வருகின்றனர். மேலும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் அவரது உடலுக்குத் தற்பொழுது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இறுதிச்சடங்கு நாளை காலை அவரது சொந்த கிராமமான ராணிப்பேட்டை அருகே நடைபெற உள்ளதாக குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version