சினிமா

குக் வித் கோமாளி பிரபலத்துடன் ரொமான்ஸ்!! சூப்பர் சிங்கர் பிரகதி வெளியிட்ட வீடியோ..

Published

on

குக் வித் கோமாளி பிரபலத்துடன் ரொமான்ஸ்!! சூப்பர் சிங்கர் பிரகதி வெளியிட்ட வீடியோ..

விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தையும் வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். சூப்பர் சிங்கர் ஜூனியர் 3 நிகழ்ச்சியில் சிங்கப்பூர் – அமெரிக்க வாழ் தமிழ் பெண்ணாக கலந்து கொண்டு இறுதி சுற்றுக்கு வந்து இரண்டாம் இடத்தினை பிடித்தவர் பிரகதி குருபிரசாத்.சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பின் முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்களை பாடியும் ஆல்பம் பாடல்களையும் பாடி வருகிறார்.தன்னுடைய காதலருடன் ரொமான்ஸ் செய்தபடி எடுத்த பிளாக் ஷேடோ புகைப்படத்தை பகிர்ந்து, ஒவ்வொரு நாளும் ஒரு கனவு போல உணரும்போது என்ற கேப்ஷனை பகிர்ந்துள்ளார்.இதனை வைத்து பிரகதி யாரை காதலிக்கிறார் என்றும் அது சாம் விஷாலா இருக்குமோ என்றும் பலரும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் பிரகதி குருபிரசாத், நடிகரும் குக் வித் கோமாளி பிரபலமும் அஸ்வின் குமாருடன் சேர்ந்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.28.03.2025 – save the date என்று கூறியபடி அஸ்வினுடன் ரொமான்ஸ் செய்த வீடியோவை பகிர்ந்துள்ளார். இருவரும் இணைந்து ஆல்பம் பாடலுக்கு தான் இப்படியொரு வீடியோவை செய்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.மேலும் அதுக்குள்ள சாம் விஷாலுடன் கல்யாணம்னு கிளப்பி விட்டுட்டீங்களே என்று சிலர் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version