இந்தியா

துணை முதல்வர் சென்ற விமானத்தில் திடீர் கோளாறு!

Published

on

துணை முதல்வர் சென்ற விமானத்தில் திடீர் கோளாறு!

டெல்லியில் இருந்து சிம்லாவுக்குச் செல்லும் அலையன்ஸ் ஏரின் எண் 9I821விமானம் நேற்றுக்காலை சிம்லா விமான நிலையத்தில் தரையிறங்கும் போது பிரேக்குகளில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகவும் அதில் இமாச்சலப் பிரதேச துணை முதல்வர் முகேஷ் அக்னிஹோத்ரி உள்ளிட்ட 44 பயணிகள் விமானத்தில் இருந்ததாக விமானி தெரிவித்தார்.

சிக்கலைச் சரிபார்க்க விமான நிலைய அதிகாரிகள் விமானத்தை ஆய்வுக்காக நிறுத்தி வைத்துள்ளதாக சிம்லா விமான நிலைய வட்டாரம் ANIஇடம் தெரிவித்துள்ளது.

Advertisement

இந்த சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version