இலங்கை
தேர்தல் விதிகளுக்கு முரணாக ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்! வேலணையில் சம்பவம்
தேர்தல் விதிகளுக்கு முரணாக ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்! வேலணையில் சம்பவம்
வேலணை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம், தேர்தல் சட்டத்துக்கு முரணான வகையில், வேட்பாளர்களின் பங்கேற்புடன் நேற்று நடைபெற்றுள்ளது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வேலணை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம், நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தலைமையில் நேற்று இடம்பெற்றது. இதன்போது, உள்ளூராட்சித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் உட்பட பல வேட்பாளர்கள் கலந்து கொண்டனர். இந்த விடயம் தேர்தல் திணைக்களத்தின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட்ட நிலையில், வேட்பாளர்களை வெளியேற்றுமாறு தேர்தல் திணைக்களத்தால் உடனடியாக உத்தரவிடப்பட்டது.
எனினும், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, அவர்களை வெளியேற்றக்கூடாது என்று குறிப்பிட்டார். ‘அவர்களை வெளியேற்றுவதாக இருந்தால், எதற்காக அழைப்பு விடுத்தீர்கள்?’ என்றும் ஒருங்கிணைப்புக் குழுத்தலைவரை வினவினார். ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் கலந்துகொண்ட வேட்பாளர்களும், இந்த விடயத்தைச் சுட்டிக்காட்டினார்கள். இதையடுத்து அவர்களை வெளியேற்றாமலேயே கூட்டம் நடைபெற்று முடிந்தது. எனினும், வேட்பாளர்களில் ஒருவர் தானாக முன்வந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.