உலகம்

நமீபியாவின் முதல் பெண் ஜனாதிபதியாக நெடும்போ பதவியேற்பு!

Published

on

Loading

நமீபியாவின் முதல் பெண் ஜனாதிபதியாக நெடும்போ பதவியேற்பு!

ஆபிரிக்க நாடான நமீபியாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றதில் தென்மேற்கு ஆபிரிக்க மக்கள் அமைப்பு கட்சி சார்பில் போட்டியிட்ட நெடும்போ நந்தி தைத்வா 58 சதவீதம் வாக்குகள் பெற்று ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார்.

72 வயதான அவரை எதிர்த்து போட்டியிட்ட மாற்றத்திற்கான சுதந்திர தேசபக்தர்கள் கட்சியினால் 26 சதவீதம் வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.

Advertisement

இந்நிலையில் தலைநகர் விண்ட்ஹோயிக்கில் உள்ள நாடாளுமன்றத்தில் அண்மையில் அவரது பதவியேற்பு விழா நடைபெற்றது. இதன்போது, முன்னாள் ஜனாதிபதி நங்கோலா பும்பா அதிகாரத்தை அவரிடம் ஒப்படைத்தார்.

இந்நிகழ்ச்சியில் தான்சானியா ஜனாதிபதி  சாமியா சுலுஹூ ஹாசன் உட்பட பல நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இதன்மூலம் நாட்டின் முதல் பெண் ஜனாதிபதி என்ற பெருமையை நெடும்போ பெற்றுள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version