இலங்கை
நெல்லியடியில் பெண்கள், சிறுவர்களை தாம் தாக்கவில்லையாம்
நெல்லியடியில் பெண்கள், சிறுவர்களை தாம் தாக்கவில்லையாம்
மறுக்கின்றது பொலிஸ் தரப்பு
யாழ்ப்பாணம் – நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், பொதுமக்கள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை பொலிஸார் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், சட்டவிரோதமாக மாடு ஒன்றை இறைச்சியாக்கிய விசாரணைகளுக்காக பொலிஸார் சென்றுள்ளனர். இதன்போதே, அவர்கள் தம்மைத் தாக்கினார்கள் என்று அந்த வீட்டில் இருந்தவர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.
எனினும், இந்தத் தகவல்களை பொலிஸார் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். ‘நாங்கள் எவரையும் தாக்கவில்லை. சட்டவிரோதமாக மாட்டை இறைச்சியாக்கிய நபர் வீட்டுக்குள் மறைந்திருந்தார். அவரைக் கைதுசெய்ய முற்பட்டபோது அந்த வீட்டிலிருந்த பெண்கள் கடமைக்கு இடையூறு விளைவித்தனர்.
சந்தேகநபரைக் கைதுசெய்வதற்காக வீட்டின் கதவையே உதைத்தோம். ஆனால் நாங்கள் எவரையும் தாக்கவில்லை’ என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.