இலங்கை

படகு சவாரி செய்து நீரில் மூழ்கி இளைஞர்கள் இருவர் பலி

Published

on

படகு சவாரி செய்து நீரில் மூழ்கி இளைஞர்கள் இருவர் பலி

களுத்துறை கலப்பில் படகு சவாரி செய்து கொண்டிருந்த இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் களுத்துறை கட்டுக்குருந்த பிரதேசத்தில் வசித்து வந்த 33 வயதுடைய மொஹமட் உசைர் மொஹமட் இன்சாப் மற்றும் மொஹமட் ஹுசைன் என்பவர்களாவர்.

Advertisement

உயிரிழந்தவர்களில் ஒருவர் இரண்டு நாட்களுக்கு முன்னர் கலப்பில் படகு சவாரி செய்துக் கொண்டிருப்பதாக தெரிவித்து தொலைபேசி அழைப்பு ஒன்றை மேற்கொண்டிருந்ததாகவும், அதன் பின்னர் எவ்வித தகவலும் பதிவாகவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், களுத்துறை கலப்பில் சடலம் ஒன்று மிதப்பதாக தொலைபேசி அழைப்பு ஒன்று கிடைத்ததை அடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்ததாகவும், சுமார் மூன்று மணி நேரத்தின் பின்னர் மேலும் ஒரு சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக களுத்துறை தெற்கு தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version