இலங்கை
வவுனியா கற்குழியில் நேற்றுச் சுற்றிவளைப்பு!
வவுனியா கற்குழியில் நேற்றுச் சுற்றிவளைப்பு!
வவுனியா கற்குழி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நேற்றுமாலை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து விசேட சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.
நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுத் தலைமறைவாக உள்ளவர்கள், போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுவோர் ஆகியோரைக் கைதுசெய்யும் நோக்குடன் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
சந்தேகத்துக்கு இடமான வாகனங்கள், குடியிருப்புப் பகுதிகள், குற்றவாளிகள் மறைந்திருக்கலாம் என்று கருதப்படும் இடங்கள் இதன்போது சோதனையிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.