விளையாட்டு

GT vs PBKS LIVE Score: வெற்றி யாருக்கு? குஜராத் – பஞ்சாப் அணிகள் இன்று மோதல்

Published

on

GT vs PBKS LIVE Score: வெற்றி யாருக்கு? குஜராத் – பஞ்சாப் அணிகள் இன்று மோதல்

10 அணிகள் பங்கேற்கும் ஐ.பி.எல். 2025 டி20 தொடரின் 18-வது சீசன் சனிக்கிழமை (மார்ச் 22) முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்நிலையில்,  இந்த தொடரில் இன்று செவ்வாய்க்கிழமை இரவு 7:30 மணிக்கு நடக்கும் அகமதாபாத்தில் நடக்கும் 5-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.கடந்த ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஐ.பி.எல் கோப்பையை வென்று கொடுத்த ஷ்ரேயாஸ் ஐயர் தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியை வழிநடத்துகிறார். அதனால், அவர் மீது மிகுந்து எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதேநேரத்தில், அனுபவமும், இளமையும் கொண்ட குஜராத் டைட்டன்ஸ் அணியை சுப்மன் கில் வழிநடத்த இருக்கிறார். இருவரின் தலைமையிலான அணிகளும் வெற்றியுடன் தொடரைத் தொடங்க நினைப்பார்கள். அதனால், இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது. நேருக்கு நேர்குஜராத் மற்றும் பஞ்சாப் அணிகள் ஐ.பி.எல் தொடரில் 5 போட்டிகளில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இந்த 5 போட்டிகளில் குஜராத் 3 முறையும், பஞ்சாப் 2 முறையும் வெற்றி பெற்றுள்ளது.இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன் வீரர்கள் பட்டியல்: குஜராத் டைட்டன்ஸ்: சுப்மன் கில் (கேப்டன் ), ஜோஸ் பட்லர், சாய் சுதர்ஷன், ஷாருக் கான், க்ளென் பிலிப்ஸ், வாஷிங்டன் சுந்தர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், ககிசோ ரபாடா, பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ்பஞ்சாப் கிங்ஸ்: ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), பிரப்சிம்ரன் சிங், பிரியான்ஷ் ஆர்யா, மார்கஸ் ஸ்டோனிஸ், கிளென் மேக்ஸ்வெல், ஷஷாங்க் சிங், நேஹால் வதேரா / சூர்யன்ஷ் ஷெக்டே, மார்கோ ஜான்சன், ஹர்பிரீத் பிரார், லாக்கி பெர்குசன், அர்ஷ்தீப் சிங் மற்றும் யுஸ்வேந்திர சாஹல்,

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version