பொழுதுபோக்கு

நடிகை திரிஷாவின் ஒர்க் – அவுட் பார்ட்னர்; இணையத்தில் ட்ரெண்டாகும் வீடியோ

Published

on

நடிகை திரிஷாவின் ஒர்க் – அவுட் பார்ட்னர்; இணையத்தில் ட்ரெண்டாகும் வீடியோ

நடிகை திரிஷா தனது செல்லப் பிராணியுடன் உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் திரிஷா. திரைத்துறையில் ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கும் மேலாக திரிஷா பயணித்து வருகிறார்.ரஜினி, கமல், அஜித், விஜய், விக்ரம் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் திரிஷா இணைந்து நடித்துள்ளார். குறிப்பாக, அண்மையில் விஜய் மற்றும் அஜித்துடன் இணைந்து லியோ மற்றும் விடாமுயற்சி ஆகிய திரைப்படங்களில் திரிஷா நடித்தார். இது தவிர தெலுங்கில் முன்னணி நடிகரான சிரஞ்சீவியுடன் இணைந்து ஒரு படத்தில் நடிகை திரிஷா நடித்து வருகிறார்.மேலும், விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திலும் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். இந்நிலையில், நடிகை திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டார். அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.அதன்படி, தனது செல்லப் பிராணியை கையில் சுமந்தபடி ஸ்குவாட்ஸ் உடற்பயிற்சியை மேற்கொள்ளும் வீடியோவை திரிஷா பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை நடிகை திரிஷாவின் ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். A post shared by Izzy⭐️Krishnan (@izzykrishnan) கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் வளர்த்து வந்த ஸோரோ என்று பெயரிடப்பட்ட நாய் ஒன்று உயிரிழந்தது குறித்து தனது வருத்தத்தை நடிகை திரிஷா பதிவிட்டிருந்தார். இந்நிலையில், தற்போது மற்றொரு செல்லப் பிராணியுடன் திரிஷா உடற்பயிற்சி செய்யும் வீடியோ பதிவிடப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version