இலங்கை

புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் திட்டம்: பிரதமரின் அறிவிப்பு

Published

on

புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் திட்டம்: பிரதமரின் அறிவிப்பு

நாட்டில் பொருளாதார வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய தலைமுறையொன்றை உருவாக்க, புதிய கல்வி சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகம், கல்வி அமைச்சு மற்றும் நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு ஆகியவற்றால் பாடசாலை மாணவர்களுக்காக செயல்படுத்தப்படும் திட்டத்துடன் இணைந்ததாக, கொழும்பு விசாகா கல்லூரியின் விசேட நாடாளுமன்ற அமர்வு நேற்று ஜனாதிபதி அலுவலகத்தின் பழைய நாடாளுமன்ற பீடத்தில் பிரதமர் தலைமையில் நடைபெற்றது.

Advertisement

கொழும்பு விசாகா கல்லூரி மாணவர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தூய இலங்கைத் திட்ட எண்ணக்கருவின் மதிப்பு மற்றும் அதன் நடைமுறை முக்கியத்துவம் குறித்த விளக்கமளிக்கப்பட்டதைத் தொடர்ந்து விசாகா கல்லூரி அதிபர் மனோமி செனவிரத்னவினால் பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு விசேட நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் ஹரிணி அமரசூரிய;
உலகில் அறிவைப் பெறுவதற்காக, மாணவர்களை தயார்படுத்துவது மற்றும் தன்னம்பிக்கை கொண்ட மாணவர் தலைமுறையை உருவாக்குவதே எமது அரசாங்கத்தின் நோக்கம் எனவும்,  புதிய கல்வி சீர்திருத்தங்கள் மூலம் வேலைவாய்ப்புச் சந்தைக்கு மட்டுமல்லாமல், சமூகத்தை வழிநடத்தக் கூடிய பொருளாதாரத்திற்கும் பங்களிக்க முடியுமான திறமையான இளைஞர்களை உருவாக்குவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனவும்,  பாடசாலைகளுக்கிடையே வளங்களைப் பகிர்ந்து செல்வதில் உள்ள ஏற்றத்தாழ்வை நீக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும்  இதற்கு பிரஜைகளின் பொறுப்பு முக்கியத்துவம் வாய்நதது எனவும் தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version