சினிமா

பொன்னி சீரியல் நடிகை வைஷ்ணவிக்கு நடந்த அசம்பாவிதம்.. வைரலாகும் வீடியோ

Published

on

பொன்னி சீரியல் நடிகை வைஷ்ணவிக்கு நடந்த அசம்பாவிதம்.. வைரலாகும் வீடியோ

விஜய் டிவியின் டாப் சீரியலான சிறகடிக்க ஆசை தொடரில் நடித்து பிரபலமானவர் வெற்றி வசந்த். இதற்கு முன் சினிமாவில் நிறைய வேலைகள் செய்துள்ள இவருக்கு இந்த தொடரே நல்ல வாழ்க்கையை கொடுத்துள்ளது.இவர் சில மாதங்களுக்கு முன் விஜய் டிவியின் பொன்னி சீரியல் நடிகை வைஷ்ணவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதில், பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு வாழ்த்தினர்.இவர்களுடைய திருமணம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் இன்ப அதிர்ச்சியை கொடுத்தது அனைவரும் அறிந்த ஒன்றே. அதற்கு முக்கிய காரணம் பொன்னி சீரியலில் வைஷ்ணவிக்கு அண்ணனாக வெற்றி வசந்த் நடித்திருந்தார்.இந்நிலையில், கடந்த ஒரு சில வாரங்களாக வைஷ்ணவி சீரியலில் காணவில்லை. இதனால் அவர் சீரியலை விட்டு விலகி விட்டார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது இவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் ஏற்கனவே சில சூட்டிங் நடைபெறும் போது தன்னுடைய கை தோள்பட்டை எலும்பு அடிபட்டது மற்றும் காலில் அடிபட்டது போன்ற வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அந்த வீடியோவில் பகிர்ந்து இருக்கிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.   

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version