இலங்கை
மத்திய மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் கைது
மத்திய மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் கைது
இலங்கை மத்திய மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சானக ஐலப்பெரும கையூட்டல் அல்லது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரச பணியைப் பெற்றுத் தருவதாகக் கூறி கையூட்டலாக 3,50,000 ரூபாய் பணம் பெற்றுக் கொண்டதற்காக சானக ஐலப்பெரும கைது செய்யப்பட்டுள்ளார். கண்டியில் வைத்தே சானக ஐலப்பெருமவை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கண்டி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் நாளை மறுதினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.