சினிமா

ரூ. 33 ஆயிரம் கோடி சொத்து!! இந்தியாவின் டாப் பணக்கார தயாரிப்பாளர்..

Published

on

ரூ. 33 ஆயிரம் கோடி சொத்து!! இந்தியாவின் டாப் பணக்கார தயாரிப்பாளர்..

இந்திய சினிமா தற்போது கோடிக்கணக்கில் வர்த்தக்ம் செய்து முக்கிய வணிக தளமாக மாறியிருக்கிறது. சொத்து மதிப்பின் அடிப்படையில் கரண் ஜோஹர், ஆதித்யா சோப்ரா, சஞ்சய் லீலா பன்சாலி, எஸ் எஸ் ராஜமெளலி உள்ளிட்டவர்கள் முன்னணியில் இருந்து வருகிறார்கள்.ஆனால் இவர்களை தாண்டி இந்தியாவின் நம்பர் 1 பணக்கார தயாரிப்பாளராக ஒருவர் இருந்து வருகிறாராம். அதுவும் தமிழ் சினிமாவை சேர்ந்த ஒரு தயாரிப்பாளர் தானாம்.ஷாருக்கான், அமிதாப் பச்சனைவிட அதிக சொத்து மதிப்பினை வைத்துள்ளார் அந்த தயாரிபாளர். அதாவது சுமார் 33 ஆயிரம் ரூபாய் கோடி சொத்துக்களுக்கு உரிமையாளராம். அவர் தான் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் கலாநிதி மாறன்.30க்கும் மேற்பட்ட டிவி சேனல்கள் சன் குழுமத்தில் இயங்கி வருகிறது. இது தவிர செய்தித்தாள்கள், இதழ்கள், சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம், சன் நெக்ஸ்ட் ஓடிடி தளம், சன் டைரக்ட் சேட்டிலைட் உள்ளிட்ட பல தளங்களை நடத்தி சம்பாதித்து வருகிறார் கலாநிதி மாறன்.கடந்த 14 ஆண்டுகளில் எந்திரன், பேட்ட, ஜெயிலர், பீஸ்ட், சர்கார், ராயன், ஜெயிலர் 2 உள்ளிட்ட படங்களை தயாரித்து பல கோடி வசூலை ஈட்டியுள்ளனர். இதன்மூலம் இந்தியாவின் பணக்கார தயாரிப்பாளராக டாப் இடத்தில் இருந்து வருகிறார் கலாநிதி மாறன்.மேலும் சன் ரைசர்ஸ் ஹைதரபாத் அணியின் உரிமையாளராக அவரது மகள் காவ்யா மாறன் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version