சினிமா

“வீர தீர சூரன்” படம் ப்ரீ புக்கிங்கில் சாதனை…! வசூலில் மாஸ் காட்ட தயாராகும் வீரக்கதை!

Published

on

“வீர தீர சூரன்” படம் ப்ரீ புக்கிங்கில் சாதனை…! வசூலில் மாஸ் காட்ட தயாராகும் வீரக்கதை!

தமிழ் சினிமாவில் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் திரைப்படங்களில் ஒன்றாக வீர தீர சூரன் படம் விளங்குகின்றது. தற்காலிக சமூக அரசியல் சூழ்நிலைகள், கதைக்களம் மற்றும் அதிரடி ஆக்சன் போன்ற அம்சங்களுடன் உருவாகியுள்ள இப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த எதிர்பார்ப்பு எப்படி இருக்கின்றது என்பதை நிரூபிக்கின்ற வகையில், தற்போது சமூக ஊடகங்களில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் வீர தீர சூரன் படத்தினை உலகளாவிய ரீதியில் ப்ரீ புக்கிங் செய்து அதிகளவு வசூலினைப் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, 1.5 கோடியை தாண்டி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி திரை உலகம் முழுவதிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் என அனைத்தும் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. பொதுவாகவே முன்பதிவு வசூல் என்பது தமிழ் சினிமாவில் மாபெரும் மாற்றத்தை உருவாக்குவதாகவே காணப்படுகின்றது. அந்தவகையில் இப்படம் திரையரங்குகளில் வெளியாக முன்னரே ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version