இலங்கை

அதானி திட்டத்தை நிராகரிப்பதால் ஏற்படும் இழப்புகள்!

Published

on

அதானி திட்டத்தை நிராகரிப்பதால் ஏற்படும் இழப்புகள்!

இந்தியாவின் அதானி குழுமத்துடனான முதலீட்டு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யுமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

Advertisement

“அதானி திட்டம் குறித்து விவாதிக்க இந்தியப் பிரதமர் மோடியைச் சந்தித்தேன். இலங்கை எவ்வளவு வழங்க முடியும் என்று அவர் விசாரித்தார்.

 நான் ஒரு பொறியியலாளர் அல்லது இந்த விடயத்தில் நன்கு அறிந்தவன் அல்ல என்பதால், 25 முதல் 50 ஜிகாவாட் வரை வழங்க முடியும் என்று கூறினேன். 

இந்தத் திட்டத்தின் மூலம் நாம் ஒரு பெரிய தொகையை சம்பாதித்திருக்கலாம் என்றும் 

Advertisement

பணம் சம்பாதிப்பதைத் தவிர, இலங்கை அதிக வெளிநாட்டு முதலீடுகளை எளிதாகப் பெற்றிருக்க முடியும். 

“இதை இழப்பது நமக்கு நல்லதல்ல. முடிந்தால், இலங்கை பண ரீதியாக பயனடையக்கூடிய இதுபோன்ற திட்டங்களை நாம் மேலும் வழங்க வேண்டும். அதானி முதலீடு செய்ததால், மேலும் பல முதலீட்டாளர்கள் இலங்கையை அணுகினர்,” என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் இந்தியா இலங்கையின் நண்பன் என்றும், எந்த வகையிலும் உதவத் தயாராக இருப்பதாகவும் வலியுறுத்திய முன்னாள் ஜனாதிபதி, இலங்கை இந்தியாவுக்கு எதிரானதா என்ற கேள்விகள் எழுப்பப்படுவதாகக் தெரிவித்தார்.

Advertisement

“சமீபத்தில் நான் இந்தியாவுக்குச் சென்றபோது, ​​இலங்கை இந்தியாவுக்கு எதிரானதா என்று அங்குள்ள சிலர் கேள்வி எழுப்பினர். அத்தகைய தோற்றத்தை ஏற்படுத்துவது நல்லதல்ல. நாம் முன்னேற வேண்டும்,” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.[ஒ]

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version