சினிமா

“என் குடும்பத்தில யாருக்கும் மனசாட்சி இல்ல…!” – நடிகை சங்கீதாவின் கசப்பான உண்மை!

Published

on

“என் குடும்பத்தில யாருக்கும் மனசாட்சி இல்ல…!” – நடிகை சங்கீதாவின் கசப்பான உண்மை!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சங்கீதா.சமீபத்தில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில், நடிகை சங்கீதா தனது வாழ்க்கை அனுபவங்களை வெளிப்படையாகப்  பகிர்ந்துள்ளார். அந்த உரையாடலில் ஒரு பெண்ணின் போராட்டம் மற்றும் துணிவு பற்றி சிறப்பாகக் கூறியுள்ளார்.அந்நேர்காணலில் தனது குழந்தை பருவம் குறித்து மிகவும் கவலையாக சங்கீதா கூறியுள்ளார். அவர் அதன்போது, “13 வயசிலேயே எனக்கு பொறுப்பு அதிகம். அந்த வயசிலயே என் குடும்பத்தைக் காப்பாத்தனும் என்பதால் வேலைக்குப் போற நிலைமைக்குத் தள்ளப்பட்டேன்…” என்று கூறினார்.பின், சினிமா வாய்ப்புகள் வந்தபோது அவை என் வாழ்க்கையின் திடீர் திருப்பங்கள் போலவே இருந்ததாக சங்கீதா பகிர்ந்துள்ளார். மேலும் “எப்ப என்னை சினிமாவில நடிக்க விட்டாங்களோ அப்பவே புரிஞ்சுகிட்டேன் என் குடும்பத்தில யாருக்கும் மனசாட்சி இல்லன்னு!” என்று கூறியுள்ளார்.அத்துடன் “நான் சினிமாவில நடிக்க ஆரம்பிக்கும்போது, என்னால எல்லாத்தையும் சமாளிக்க முடியாத நிலை. வீட்டுக்குள்ள ஒருத்தருக்கும் என் மனநிலை புரியல. எனக்கு டிரெஸ் , சாப்பாடு வேணும்… என்பதற்கெல்லாம் போராட வேண்டிய நிலைமை” என்று வருத்தமாகக் கூறியுள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version