இலங்கை

ஐஸ்கிரீம் உற்பத்தி நிலையத்திற்கு 70 ஆயிரம் ரூபாஅபராதம்!

Published

on

ஐஸ்கிரீம் உற்பத்தி நிலையத்திற்கு 70 ஆயிரம் ரூபாஅபராதம்!

 மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற வகையில் உணவைக் கையாண்ட உணவக உரிமையாளர்கள் உட்பட ஐஸ்கிரீம் உற்பத்தி விற்பனை நிலையத்திற்கு எதிராக ரூபா 70 ஆயிரம் தண்டப்பணம் விதிக்கப்பட்டு எச்சரிக்கையையும் செய்யப்பட்டது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆலோசனைக்கமைய சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தலைமையில் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பல உணவகங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

Advertisement

இதன் போது பலசரக்கு கடைகள் ஹோட்டல்கள் துரித உணவுக் கடைகள் ஐஸ்கிரீம் உற்பத்தி நிலையம் போன்ற சுகாதார நடை முறைகளை பின்பற்றாத உரிமையாளர்களுக்கு புதன்கிழமை(26) சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு ஆஜர் படுத்திய போது எதிராக தலா 25000 , 15000, 20000, 10000 ரூபா உள்ளடங்கலாக 70 ஆயிரம் தண்டப்பணம் அறவிடப்பட்டதுமின்றி எச்சரிக்கையையும் செய்யப்பட்டது.

அத்துடன் ஹோட்டல் ஐஸ்கிரீம் உற்பத்தி நிலைய உரிமையாளர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

மேலும் இரண்டு வாரங்களுக்கு பிறகு மீண்டும் பரிசோதனை செய்யுமாறும் முன்னேற்றம் காணப்படாத விடத்து மூடுவதற்கான இறுதி உத்தரவு வழங்க நீதிவானினால் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version