உலகம்

பேஸ்புக் செயலிக்கு திடீர் தடை!

Published

on

பேஸ்புக் செயலிக்கு திடீர் தடை!

அவுஸ்திரேலியா அருகே பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடாக பப்புவா நியூ கினியா உள்ளது. சுமார் 20 இலட்சம் மக்கள் தொகை வசிக்கும் இந்த நாடு சுற்றுலா தலங்களுக்கு பெயர் போனது. 

இங்குள்ள பொதுமக்கள் பிரபல சமூக வலைதளமான பேஸ்புக்கை அதிகளவில் பயன்படுத்தி வருகிறார்கள். சுமார் 13 இலட்சம் பேர் பேஸ்புக்கில் கணக்கு தொடங்கி பயன்படுத்தி வந்துள்ளனர். 

Advertisement

இதற்கிடையே, பேஸ்புக் மூலமாக போலி செய்திகள் மற்றும் ஆபாச படங்கள் அதிகளவில் பரப்பப்படுவதாக முறைப்பாடுகள் எழுந்தன. இதனால் பேஸ்புக்குக்கு தடை விதிக்கப்படும் என தகவல் வெளியாகி வந்தது. 

இந்நிலையில், பப்புவா நியூ கினிவாவில் பேஸ்புக்குக்கு திடீரென தடை விதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பேஸ்புக்கை பயன்படுத்த முடியாமல் சிரமமடைந்துள்ளனர். 

இது மக்களின் கருத்து சுதந்திரத்தையும், பேச்சுரிமையையும் பறிப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version