இலங்கை

யாழில் பாழடைந்த வீடொன்றில் மீட்கப்பட்ட பெரும்தொகை ஆபத்தான பொருள்!

Published

on

Loading

யாழில் பாழடைந்த வீடொன்றில் மீட்கப்பட்ட பெரும்தொகை ஆபத்தான பொருள்!

  யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பொலிகண்டிப் பகுதியில் இன்று (27) காலை ஒரு தொகை கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இராணுவப் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளபட்ட சுற்றிவளைப்பில் கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

Advertisement

குறித்த பகுதியில் பழைய வீடொன்றில் மறைத்து வைக்கப்படிருந்த நிலையில் குறித்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்டுள்ள 75 கிலோ கிராமுக்கும் அதிகளவான போதைப்பொருள் வல்வெட்டித்துறை பொலிசாரிடம் கையளிக்கப்படவுள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என தெரியவருகின்றது..   

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version