சினிமா

இன்ஸ்டாவில் கிளாமராக போட்டோஷூட் செய்த சிவாங்கி..! ஸ்டைலிஷ் லுக்கில் சும்மா கலக்குறாங்களே!

Published

on

இன்ஸ்டாவில் கிளாமராக போட்டோஷூட் செய்த சிவாங்கி..! ஸ்டைலிஷ் லுக்கில் சும்மா கலக்குறாங்களே!

விஜய் டீவியில் ஒளிபரப்பான “சூப்பர் சிங்கர்” நிகழ்ச்சியின் மூலம் தமிழ்நாடு முழுவதும் அறிமுகமானவர் சிவாங்கி. இவர் தனது இசைத் திறமை மற்றும் காமெடி என்பன மூலம் ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டவர். அதனைத் தொடர்ந்து “குக்குவித் கோமாளி” நிகழ்ச்சியில் இணைந்து தனது திறமையைக் காட்டியிருந்தார்.இசை நிகழ்ச்சியில் தன் பயணத்தை தொடங்கிய சிவாங்கி இன்று சினிமா உலகிலும் பல படங்களில் நடித்து தனது வாழ்க்கையின் புதுப்பயணத்தை தொடங்கியுள்ளார். குறிப்பாக, டான் படத்தில் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தாலும் அப்படம் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துக் கொண்டார்.இந்நிலையில், சமீபத்தில் சிவாங்கி எடுத்துக்கொண்ட புதிய போட்டோஷூட் இணையத்தில் பரவி வருகின்றது. தற்பொழுது வெளியான புகைப்படங்களில் சிவாங்கி மிகவும் அழகாகவும் ஸ்டைலாகவும் காணப்படுகின்றார். மேலும் இணையத்தில் பகிரப்பட்டுள்ள இப்புகைப்படங்களிற்கு இன்ஸ்டாகிராமில் ஆயிரக்கணக்கான லைக்குகளை ரசிகர்கள் பதிவுசெய்துள்ளனர்.சூப்பர் சிங்கரில் தன்னுடைய பயணத்தைத் தொடங்கி குக்குவித் கோமாளி மூலம் அனைவரையும் சிரிக்க வைத்த சிவாங்கி, இப்பொழுது ஒரு ஸ்டைலிஷ் நடிகையாக வளர்ந்துள்ளார். அந்தவகையில், அவரது சமீபத்திய போட்டோஷூட் இதற்கான ஆதாரமாக காணப்படுகின்றது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version