இலங்கை

காலாவதியான பொருட்கள் விற்பனை ; 35000 ரூபா தண்டம்

Published

on

காலாவதியான பொருட்கள் விற்பனை ; 35000 ரூபா தண்டம்

   முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு மற்றும் வள்ளிபுனம் பகுதிகளில் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்த உரிமையாளருக்கு சுமார் 30 ஐயாயிரம் ரூபா தண்டம் நீதிமன்றினால் இன்றையதினம் விதிக்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட வள்ளிபுனம் பகுதியில் பழுதடைந்த அரிசியை கர்ப்பிணி தாய்மாருக்கு விற்பனை செய்வதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

முறைப்பாட்டின் அடிப்படையில் 22 ஆம் திகதி புதுக்குடியிருப்பு மற்றும் வள்ளிபுனம் பகுதிகளில் அமைந்துள்ள பிரபல விற்பனை நிலையங்களில் சோதனை நடவடிக்கை ஒன்றினை மேற்காெண்டிருந்தனர்.

இதன்போது திகதி காலாவதியான 700kg அரிசி, பிஸ்கட் பைக்கற்றுகள் கைப்பற்றப்பட்டிருந்தது.

காலாவதி பொருட்கள் கைப்பற்றப்பட்ட பிரபல விற்பனை நிலைய உரிமையாளர்களிற்கு எதிராக இன்று (28) முல்லைத்தீவு மேலதிக நீதவான் நீதிமன்றில் பொது சுகாதார பரிசோதகர்களால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்து.

Advertisement

இந் நிலையில் குறித்த வழக்கு இன்றையதினம் முல்லைத்தீவு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இதன்போது உரிமையாளர்களை குற்றவாளியாக இனங்கண்ட நீதிமன்றம் 35,000 ரூபா தண்டம் விதித்ததுடன் கடுமையான எச்சரிக்கையும் நீதிம்ன்றத்தினால் வழங்கப்பட்டிருந்தது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version