சினிமா

“சக்தித் திருமகன்” படத்தோடு திரையுலகை விட்டு விலகும் விஜய் ஆண்டனி..! எதற்காகத் தெரியுமா?

Published

on

“சக்தித் திருமகன்” படத்தோடு திரையுலகை விட்டு விலகும் விஜய் ஆண்டனி..! எதற்காகத் தெரியுமா?

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக தன் பயணத்தைத் தொடங்கி பின்னர் நடிகராக மாறியவர் விஜய் ஆண்டனி. தற்பொழுது அவர் நடிப்பிலிருந்து முழுமையாக விலகி இசையமைப்பிற்குத் திரும்பப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.இந்த அறிவிப்பு, திரையுலகில் உள்ள அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், பிச்சைக்காரன் , கோடியில் ஒருவன் போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார் விஜய் ஆண்டனி. எனினும் அவர் இப்பொழுது எடுத்திருக்கும் முடிவு ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சமீபத்தில், ஹிப் ஹாப் ஆதி அறிவித்திருந்தது போலவே, தற்போது விஜய் ஆண்டனியும் “நடிப்பை விட இசையே என் அடையாளம், அதில் தான் முழு நேர கவனம் செலுத்த விரும்புகின்றேன்” எனக் கூறியுள்ளார். மேலும் விஜய் ஆண்டனி தற்பொழுது நடித்து முடித்திருக்கும் “சக்தித் திருமகன்” படம் தான் அவருடைய கடைசி படம் எனவும் கூறப்படுகின்றது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version