உலகம்
சர்ச்சைக்குரிய எல் சல்வடோர் சிறை!
சர்ச்சைக்குரிய எல் சல்வடோர் சிறை!
அமெரிக்காவிற்கு எதிராக செயற்பட்ட குற்றச்சாட்டில் அண்மையில் கைதுசெய்யப்பட்ட வெனிசுலாவைச் சேர்ந்த குற்ற கும்பல்களின் பிரதான நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள எல் சல்வடோரின் மிகப்பெரிய சிறைச்சாலைக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பாதுகாப்பு அதிகாரிகள் விஜயம் செய்துள்ளனர்.
அமெரிக்க உட்துறை பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோயம் உள்ளிட்ட குழுவினர் சிறைச்சாலைக்கு விஜயம் செய்துள்ள காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
எல் சல்வடோரிலுள்ள சர்ச்சைக்குரிய இந்த சிறைச்சாலையின் உள்ளே இடம்பெறும் விடயங்கள் காணொளியாக இவ்வாறு வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தமது நாட்டிற்கு எதிராக செயற்ப்பட்ட குறித்த பாரிய குற்றவாளிகளை இவ்வாறு சிறைச்சாலையில் தடுத்து வைப்பதற்கு வழங்கிய ஒத்துழைப்பு தொடர்பில் எல் சல்வடோர் நாட்டிற்கு அமெரிக்கா நன்றி தெரிவித்துள்ளது.
238 வெனிசுலா நாட்டைச் சேர்ந்த குற்றவாளிகள் இவ்வாறு எல் சல்வடோர் சிறையில் அண்மையில் தடுத்து வைக்கப்பட்டனர்.