பொழுதுபோக்கு

செருப்புகள் ஜாக்கிரதை டூ சப்தம் வரை… இந்த வார ஓடிடி ரிலீஸ்..!

Published

on

செருப்புகள் ஜாக்கிரதை டூ சப்தம் வரை… இந்த வார ஓடிடி ரிலீஸ்..!

நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இந்த வாரம் ரிலீஸாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.  சப்தம்: அறிவழகன் வெங்கடாச்சலம் இயக்கத்தில் ஆதி, சிம்ரன், லைலா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ‘சப்தம்’. ஹாரர், திரில்லர் கதைக்களத்தில் தியேட்டரில் வெளியான இப்படம் மார்ச் 28 ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகிறது.முபாசா தி லயன் கிங்: கடந்தாண்டு வெளியான சூப்பரான ஹாலிவுட் அனிமேஷன் திரைப்படம் ‘முபாசா தி லயன் கிங்’. தமிழ் டப்பிங்கில் தியேட்டரில் வெளியான இப்படம் மார்ச் 26 ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. அகத்தியா: பா. விஜய் இயக்கத்தில் ஜீவா, அர்ஜுன், யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ‘அகத்தியா’. அட்வென்ச்சர், ஃபேண்டஸி, மிஸ்ட்ரி கதைக்களத்தில் வெளியான இப்படம் ரசிகர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்த நிலையில் மார்ச் 28ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகவுள்ளது.ஓம் காளி ஜெய் காளி: விமல், ராமு செல்லப்பா, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள வெப் தொடரான ‘ஓம் காளி ஜெய் காளி’ மார்ச் 28ம் தேதி ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடியில் வெளியாகவுள்ளது.  எங்கையோ நடந்த கொலை வழக்கில் சிக்கிக்கொள்ளும் விமல் அதில் இருந்து எப்படி வெளியேறுகிறார் என்பதே இப்படத்தின் கதைக்களம் ஆகும்.  செருப்புகள் ஜாக்கிரதை: செருப்பை மையப்படுத்தி இயக்குநர் ராஜேஷ் சூசைராஜ் இயக்கத்தில் சிங்கம்புலி, இந்திரஜித், லொள்ளு சபா மனோகர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் மார்ச் 28 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. ஃபயர்: பாலாஜி முருகதாஸ், சாக்ஷி அகர்வால், சாந்தினி, ரச்சிதா மகாலட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான ‘ஃபயர்’ திரைப்படம் இளைஞர்களை அதிகம் ஈர்த்த நிலையில் மார்ச் 28 ஆம் தேதி டெண்டுகோட்டா மற்றும் ஜீ5 ஓடிடியில் வெளியாகிறது. விஜய் எல்எல்பி: இயக்குநர் எம் மதியழகன் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான திரைப்படம் ‘விஜய் எல்எல்பி’. திரில்லர் கதைக்களத்தில் வெளியான இப்படம் நாளை 28ம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்: லாஸ்லியா, ஹரி பாஸ்கர் ஜோடியாக நடித்து வெளியான இத்திரைப்படம் கடந்த 25ம் தேதி டிஸ்னி ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியானது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version