இலங்கை
தடையின் பின்னணியில் விடுதலைப்புலிகளா… ஆராய்கின்றதாம் அரசு
தடையின் பின்னணியில் விடுதலைப்புலிகளா… ஆராய்கின்றதாம் அரசு
பிரிட்டனின் தடை விவகாரத்தின் பின்னணியில் புலம்பெயர் புலிகள் உள்ளனரா? என்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்றது என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா இராணுவத்தின் முன்னாள் தளபதிகளுக்கு எதிராக பிரிட்டன் பிறப்பித்துள்ள தடைகளின் பின்னணியில், கனேடிய நீதியமைச்சர் ஹரி ஆனந்த சங்கரியும்,புலம்பெயர் புலிககளும் உள்ளனரா? என்று அமைச்சரிடம் நேற்று ஊடகவியலாளர்கள் வினவியுள்ளனர். இதன்போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
பிரிட்டனின் தடைகளுக்குப் பின்னால் உள்ள அனைத்துச் சாத்தியமான காரணங்கள் தொடர்பிலும் நாங்கள் ஆராய்ந்து வருகின்றோம். உலக ஒழுங்கு தொடர்பான புரிதல் எமக்கு உள்ளது. எனவே, எம்மால் பல விடயங்களை அனுமானிக்கவும், தீர்மானிக்கவும் முடியும்.
இலங்கையென்பது சுயாதீன நாடாகும். எனவே, பிரிட்டனால் எடுக்கப்பட்ட ஒருதலைபட்சமான தீர்மானம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு உரிய வகையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த விடயத்திலும் அரசியல் நடத்துவதற்கு எதிரணிகள் முற்படுகின்றன. அந்த பொறிக்குள் நாம் சிக்கமாட்டோம் – என்றார்.