இலங்கை

பாங்கொக் வாழ் இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு

Published

on

பாங்கொக் வாழ் இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு

 இன்று மியன்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கம் தாய்லாந்தின் பாங்கொக் உள்ளிட்ட பகுதிகளில் உணரப்பட்டதைத் தொடர்ந்து , பாங்கொக் வாழ் இலங்கையர்களுக்கு வெளிவிவகார அமைச்சு விசேட அறிவிப்பை விடுத்துள்ளது.

பாங்கொக்கில் உள்ள இலங்கை தூதரகம் தாய்லாந்து அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவித்துள்ளது.

Advertisement

அங்குள்ள இலங்கையர்கள் தொடர்பில் பாதகமான சம்பவங்கள் எதுவும் இதுவரையில் பதிவாகவில்லை எனவும் வௌிவிவகார அமைச்சு கோரியுள்ளது.

மேலும், தாய்லாந்தில் உள்ள இலங்கையர்கள் அவசர நிலையின் போது கீழ்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு வௌிவிவகார அமைச்சு கோரியுள்ளது.

சுமார் 200 இலங்கையர்கள் மியான்மரில் தங்கியிருப்பதாகவும், மற்றொரு இலங்கையர் குழு தாய்லாந்தின் பாங்காக்கில் தங்கியிருப்பதாகவும் வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Advertisement

இன்று மியன்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கம் தாய்லாந்தின் பாங்கொக் உள்ளிட்ட பகுதிகளில் உணரப்பட்டதைத் தொடர்ந்து, தாய்லாந்து பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ரா பாங்கொக்கில் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தி இருந்தார்.

மியன்மாரின் இரண்டாவது பெரிய நகரமான மண்டலேயில் இன்று (28) 7.7 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் மியன்மார் மற்றும் பாங்காக்கில் பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.

Advertisement

மேலும் பாங்கொக்கில் ஒரு உயரமான கட்டிடம் இடிந்து விழும் காணொளியையும் வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டிருந்தன.     

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version