இந்தியா

மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்; அகவிலைப்படி உயர்வுக்கு அமைச்சரவை ஒப்புதல்: எத்தனை சதவீதம் தெரியுமா?

Published

on

மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்; அகவிலைப்படி உயர்வுக்கு அமைச்சரவை ஒப்புதல்: எத்தனை சதவீதம் தெரியுமா?

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை இரண்டு சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான முடிவு இன்று (மார்ச் 28) பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஊழியர்களுக்கான அகவிலைப்படி 55 சதவீதம் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் படிக்கவும்: Union Cabinet approves 2% DA hike for central govt employees பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு ஆகியவற்றின் தாக்கத்தை ஈடுகட்ட, அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கு நிதி ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 7-வது மத்திய ஊதியக் குழு பரிந்துரைத்த முன்மொழிதலின் படி, இந்த உயர்வால் சுமார் 48.66 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 66.55 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த முடிவால் கருவூலத்திற்கு ஆண்டுக்கு ரூ. 6,614.04 கோடி நிதி பாதிப்பு ஏற்படும் என்று கருதப்படுகிறது.பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் எதிர்கொள்ளும் பணவீக்கத்தின் தாக்கத்தை ஈடுசெய்ய, அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஆகியவை அவ்வப்போது திருத்தப்படுகின்றன.கடந்த ஆண்டு, மத்திய அமைச்சரவை 3 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி, 53 சதவீதமாக மாற்றியது.அடிப்படை ஊதியம்/ஓய்வூதியத்தின் 50 சதவீதம் என்ற விகிதத்தை விட இந்த கூடுதல் தவணை அகவிலைப்படி, விலைவாசி உயர்வை ஈடுசெய்யும் என்று அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version