இலங்கை
மனித உரிமை மீறலில் ஈடுபடுவது பிரிட்டன்தான்
மனித உரிமை மீறலில் ஈடுபடுவது பிரிட்டன்தான்
பிரிட்டனால் தடைவிதிக்கப்பட்ட கரன்னகொட ஆவேசக்கருத்து
உலகிலேயே மனித உரிமைகளை அப்பட்டமாக மீறிய நாடென்றால், அது பிரிட்டன்தான் என்று ஸ்ரீலங்கா கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரன்னகொட தெரிவித்தார்.
பிரிட்டனால் தனக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகள் தொடர்பில் ஊடகமொன்றிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின்போது இலங்கையில் ஊவா, வெல்லஸ்ஸ புரட்சியை ஒடுக்குவதற்காக மக்களைக் கொலை செய்தனர். தமது செயல் தொடர்பில் பிரிட்டன் வெட்கப்பட வேண்டும். எனக்கு விதிக்கப்பட்ட தடையைக் கண்டித்து அரசாங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது. அத்துடன் நின்றுவிடாமல் முன்னோக்கி செல்ல வேண்டும். ஏனெனில் போலிக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் எமது நாட்டுக்கு எதிராகக்கூட தடை விதிக்கப்படக்கூடும்’ – என்றார்.