சினிமா
மரண செய்தி கேட்டால் கண்ணீர் வருமா கவிதை வருமா.? இளையராஜா, வைரமுத்துவை விளாசிய பிரபலம்
மரண செய்தி கேட்டால் கண்ணீர் வருமா கவிதை வருமா.? இளையராஜா, வைரமுத்துவை விளாசிய பிரபலம்
நடிகரும் இயக்குனருமான சில தினங்களுக்கு முன்பு மரணம் அடைந்தார். மாரடைப்பு காரணமாக அவர் இவ்வுலகை விட்டு சென்ற செய்தியை கேட்டதுமே அனைவருக்கும் பதட்டம் தான்.
சூர்யா, கார்த்தி, விஜய், சரத்குமார், கவுண்டமணி என அத்தனை பிரபலங்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். ஆனால் சிலர் சோசியல் மீடியாவில் கூட இரங்கல் தெரிவிக்கவில்லை.
அதில் நேரில் வராதது கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஆனால் அவர் ஊரில் இருந்திருந்தால் நிச்சயம் ஓடோடி வந்திருப்பார்.
தற்போது அவர் வெளிநாட்டில் இருக்கிறார். வர முடியாத சூழல் என்பதால் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக செய்திகள் கசிந்துள்ளது.
ஆனால் பாரதிராஜாவுக்கு நெருக்கமான நட்பு வட்டாரத்தில் இருக்கும் கமல் நேரில் வரவில்லை. சோசியல் மீடியாவில் இரங்கல் பதிவு மட்டும் போட்டார்.
கேட்டால் சாவு வீட்டுக்கு செல்வதில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று சொல்வார். இப்படியே எல்லோரும் நினைத்தால் இறுதியில் நம்மை தூக்கி செல்வதற்கு கூட ஆள் இருக்காது என வலைப்பேச்சு அந்தணன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அதேபோல் இந்த இறப்பு செய்தி வந்ததும் வீடியோ ஒன்றை வெளியிட்டு தன் வருத்தத்தை பதிவு செய்திருந்தார். இறுதி அஞ்சலி செலுத்த நேரில் செல்லவில்லை.
இத்தனைக்கும் அவரின் நெடுங்கால நெருங்கிய நண்பர். பவதாரணி இறப்பின் போது முடியாத நிலையிலும் பாரதிராஜா வந்து அழுத காட்சிகளை நாம் பார்த்தோம்.
ஆனால் மனோஜ் இறப்பிற்கு இளையராஜா வரவில்லை. தற்போது பார்த்தால் திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றி வைத்துள்ளார்.
அதேபோல் நீண்ட கவிதை ஒன்றை வெளியிட்டு இருந்தார். ஒருவரின் மரண செய்தி கேட்டால் கண்ணீர் வருமா கவிதை வருமா. எப்படி இப்படியெல்லாம் இருக்கிறார்கள் என அந்தணன் வருத்தத்தோடு பேசி இருக்கிறார்.
அதேபோல் பாரதிராஜாவின் நெருங்கிய நட்பு வட்டாரங்களே இப்படி நாடகமாடி விட்டார்கள். இதையெல்லாம் பார்க்கும் போது என்ன சொல்றதுன்னே தெரியல என அவர் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.
Cinemapettai provides today tamil cinema news, kollywood updates, latest tamil cinema news, trending tamil cinema news, cinema news. இன்றைய தமிழ் சினிமா செய்திகள் 24/7 hours.
Contact us: contact@cinemapettai.com
©2025 Cinemapettai. All Rights Reserved..
Developed by VBROS TECHNOLOGIES