இலங்கை

மோடி வருகைக்காக அனுராதபுரத்தில் நாய்களை அகற்ற முடிவு

Published

on

மோடி வருகைக்காக அனுராதபுரத்தில் நாய்களை அகற்ற முடிவு

  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையை முன்னிட்டு, அனுராதபுரம் நகர எல்லைக்குள் உள்ள அனைத்து தெரு நாய்களையும் அகற்ற அனுராதபுரம் ஆளுநர் அலுவலகம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அனுராதபுரம் மாநகராட்சி தற்போது இந்த முடிவை செயல்படுத்த முயற்சிக்கிறது. மாநகராட்சி கால்நடைத் துறை உடனடியாக இந்த திட்டத்தை தொடர அறிவுறுத்தப்பட்டது.

Advertisement

அனுராதபுரத்தில் மாநகராட்சி ஆதரவுடன் ஐந்து ஆண்டு பணித்திட்டம் தற்போது நடைபெற்று வருவதாகவும், 90 சதவீதத்திற்கும் அதிகமான தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு கருத்தடை செய்யப்பட்டுள்ளதாகவும் டாக்டர் நாணயக்கார கூறினார்.

நரேந்திர மோடி ஏப்ரல் முதல் வாரத்தில் மூன்று நாள் அதிகாரப்பூர்வ பயணமாக இலங்கை வர திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்போது அனுராதபுரம் ஜெய ஸ்ரீ மஹா போதிக்கும், இந்திய அரசாங்கம் இலங்கை முன்னெடுத்துள்ல திட்டங்களின் திறப்பு விழாவிலும் பங்கேற்க உள்ளார்.

Advertisement

அதேவேளை மோடி வருகையையிட்டு இடம்பெற்ற கூட்டத்தில், தெரு நாய்கள் மற்றும் மாடுகள் சாலையில் சுற்றித் திரிவது குறித்து விவாதித்தோம்.

இந்திய பிரதமர் அனுராதபுரம் நகரத்தை விட்டு வெளியேறும் வரை இரண்டு நாட்களுக்கு நாய்கள் மற்றும் மாடுகளின் உரிமையாளர்கள் தங்கள் விலங்குகளை வெளியிட வேண்டாம் என்று எச்சரிக்க முடிவு செய்யப்பட்டதாக அனுராதபுரம் மாநகராட்சி ஆணையர் கூறினார்.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version