சினிமா
வீர தீர சூரன் முதல் நாள் முதல் காட்சி!! ஆட்டோவில் ஏறி எஸ்கேப்பான சியான் விக்ரம்.
வீர தீர சூரன் முதல் நாள் முதல் காட்சி!! ஆட்டோவில் ஏறி எஸ்கேப்பான சியான் விக்ரம்.
இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம், துஷாரா விஜயன், எஸ் ஜே சூர்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் வீர தீர சூரன். சியான் விக்ரம் நடிப்பில் நேற்று மார்ச் 27 ஆம் தேதி ரிலீஸாகவிருந்த வீர தீர சூரன் படத்தின் முதல் நாள் முதல் காட்சி காலை 9 மணிக்கு ஒளிப்பரப்பாகவிருந்தது.ஆனால் தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் 9 மணி காட்சிக்கு தடை விதிக்கப்படது. இதனால் ரசிகர்கள் வருத்தமடைந்த நிலையில், படக்குழுவினர் படத்தை ரிலீஸ் செய்ய முயற்சி செய்தனர். நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டு படத்தின் மீதுள்ள தடையை நீக்கி 4 மணிக்கு காட்சிக்கு அனுமதி அளித்தது. முதல் நாள் முதல் காட்சி 4 மணிக்கு துவங்கி ரசிகர்கள் மத்தில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.முதல் நாள் முதல் காட்சி 4 மணிக்கு ஒளிப்பரப்பான நிலையில், படத்தை பார்க்க சியான் விக்ரம் வந்துள்ளார். சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல பிரபலங்களில் வீர தீர சூரன் படத்தினை பார்க்க இரவு காட்சி வந்தனர். ஏற்கனவே புஷ்பா 2 படத்தினை பார்க்க வந்த அல்லு அர்ஜுனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு ரேவதி எனும் பெண்மணி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்நிலையில் சியான் விக்ரம் வந்ததை அறிந்த ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக அவரை சூழ நெரிசல் ஏற்பட ஆரம்பித்திருக்கிறது. கூட்ட நெரிசல் குறைய இங்கிருந்து எப்படியாவது சென்றுவிட வேண்டும் என்று விக்ரம் நினைத்துள்ளார். அதனால், அவர் காரில் செல்லாமல், அங்கிருந்து ஓடி ஒரு ஆட்டோவில் ஏறிச்சென்றுள்ளார். அவர் எஸ்கேப்பாகிய வீடியோ தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.