இலங்கை
வேட்புமனுவில் போலிக் கையொப்பம்: பொலிஸ் விசாரணை!
வேட்புமனுவில் போலிக் கையொப்பம்: பொலிஸ் விசாரணை!
உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுவில், ஒருவருடைய கையொப்பத்தைப் போலியாக வைத்த குற்றச்சாட்டில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மீசாலை மேற்கு மீசாலையைச் சேர்ந்த நபரின் கையொப்பமே இவ்வாறு போலியாக வைக்கப்பட்டுள்ளது. அந்த நபர் தேர்தல் ஆணைக்குழுவுக்கு இது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்தே, தேர்தல் ஆணைக்குழுவின் அறிவுறுத்தலுக்கு அமைய பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.