இலங்கை
3 மாதங்களில் 6 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை
3 மாதங்களில் 6 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை
இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் மார்ச் 26 ஆம் திகதி வரை 684,960 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
மார்ச் மாதத்தின் முதல் 26 நாட்களில் மட்டும் நாட்டிற்கு வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 191,982ஆக பதிவாகியுள்ளது.
அதேவேளை இந்த வருடத்தில் 3 மில்லியன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு ஈர்த்தெடுக்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான் சமிந்த ரணசிங்க தெரிவித்தார்.