இலங்கை

அமைச்சர்களின் சொகுசு வீடுகள் தூதரகங்களுக்கு

Published

on

அமைச்சர்களின் சொகுசு வீடுகள் தூதரகங்களுக்கு

  இலங்கையிலுள்ள தூதரகங்களுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அமைச்சர்களின் சொகுசு வீடுகளை வழங்குவதில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி முப்பதுக்கும் மேற்பட்ட வெவ்வேறு நிறுவனங்கள், அமைச்சர்களின் சொகுசு வீடுகளை வாடகைக்கு விடுமாறு பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

Advertisement

இவற்றில் தூதரகங்கள், பல்வேறு அமைச்சுகள், நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அடங்கும் என்று அமைச்சின் வட்டாரங்கள் தெரிவித்தன.

மாணவர் விடுதிகளை நடத்துவதற்கு அந்த அமைச்சுப் பணியாளர் சொகுசு வீடுகளை வழங்குமாறு பல்கலைக்கழகங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

இது தவிர, பல நீதிபதிகள் தங்களுக்கு அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லங்களை வழங்குமாறு கோரியுள்ளதாகவும் அமைச்சு கூறியுள்ளது.

Advertisement

இந்த விவகாரத்தை ஆராய்ந்த குழு, இந்த அமைச்சர்களின் குடியிருப்புகளை பொருளாதார ரீதியாக உற்பத்தி செய்யும் திட்டத்திற்குப் பயன்படுத்துமாறு ஜனாதிபதிக்கு பரிந்துரைத்துள்ளது.

அந்தக் குழுவின் அறிக்கை சமீபத்தில் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதேவேளை தற்போதைய ஜனாதிபதி அனுர அரசாங்க அமைச்சர்கள், அமைச்சர் வீடுகளை ஏற்றுக்கொள்வதில்லை என்ற கொள்கை முடிவை எடுத்துள்ளனர்.  

இந்நிலையில் கொழும்பில் முப்பத்தைந்து அமைச்சர்களின் சொகுசு வீடுகள் உள்ளதாக கூறப்படுகின்றது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version