இலங்கை

ஒட்டுசுட்டானில் மனித பாவனைக்குதவாத உணவுப் பொருட்கள் அழிப்பு

Published

on

ஒட்டுசுட்டானில் மனித பாவனைக்குதவாத உணவுப் பொருட்கள் அழிப்பு

  முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் சுகாதார பரிசோதகர்களால் நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது மனித பாவனைக்குதவாத உணவுப் பொருட்கள் அழிக்கப்பட்டதுடன், உணவுக் கடைகளும் மூடப்பட்டுள்ளது.

ஒட்டுசுட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட பகுதியிலுள்ள உணவகங்களில் சுகாதார பரிசோதகர்கள்  இன்று (29) நடத்த்திய திடீர் சோதனையின் போது பாவனைக்குதவாத உணவுப் பொருட்கள்  மீட்கப்பட்டது.

Advertisement

இதன்போது , உணவுக் கடையொன்றிலிருந்து மனித பாவனைக்குதவாத பத்து கிலோ கிராம் ரொட்டி, றோல்ஸ் போன்ற உணவு பொருட்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.

கடை சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கி வந்த தை அடுத்து கடை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன் சுகாதாரமான முறையில் இயங்க நடவடிக்கை எடுப்பதற்கு கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் வழங்கப்பட்ட கால அவகாசத்துக்குள் சுகாதாரமான முறையில் இயங்காவிடின் கடையின் உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகளால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version