சினிமா
கெத்து தினேஸுக்கு வில்லனாகும் முன்னணி ஹீரோ..! யார் தெரியுமா?
கெத்து தினேஸுக்கு வில்லனாகும் முன்னணி ஹீரோ..! யார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களம் மற்றும் சமூக கருத்துகளைக் கொண்டு ரசிகர்களைக் கவர்ந்து வரும் இயக்குநர் பா.ரஞ்சித், தற்பொழுது தயாரிப்பாளராகவும் திகழ்கின்றார். அவரின் தயாரிப்பு நிறுவனமான ‘நீலம் புரொடக்சன்’ மூலம் தயாராகும் புதிய படமாக ‘வேட்டுவம்’ இருக்கின்றது.இப்படத்தில் கெத்து தினேஷ் ஹீரோவாக நடிக்கின்றார் என்பதை ஏற்கனவே படக்குழுவினர் அறிவித்திருந்தனர். அந்தவகையில் தற்பொழுது இன்னும் ஒரு புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்தவகையில் ‘வேட்டுவம்’ படத்தில் முக்கியமான எதிர்மறை பாத்திரத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோ ஆர்யா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆர்யா கடந்த சில ஆண்டுகளில், கடம்பன் , சரவணன் இருக்கப் பயமேன் போன்ற வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்துள்ளார். அந்தவகையில் இந்த முயற்சி ஆர்யா வாழ்க்கைக்கு புதிய திருப்புமுனை இருக்கும் என்றே கூறலாம். ஏனெனில் இவர் கடந்த சில வருடங்களாக ஹீரோவாக நடித்து வந்ததால் தற்பொழுது வெளியான தகவல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.