இலங்கை

சுரேஷ் ரெய்னா சாதனையை முறியடித்த தோனி

Published

on

சுரேஷ் ரெய்னா சாதனையை முறியடித்த தோனி

ஐ.பி.எல் தொடரின் 8-வது தொடரில் சிஎஸ்கே அணிக்காக அதிக ஓட்டங்கள் எடுத்த சுரேஷ் ரெய்னாவின் சாதனையை எம்.எஸ்.தோனி முறியடித்துள்ளார்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐ.பி.எல் தொடரின் 8-வது தொடர் நேற்று நடைபெற்றது.

Advertisement

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ரோயல் செலன்ஜர்ஸ் அணிகள் மோதின.

முதலில் விளையாடிய பெங்களூர் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 196 ஓட்டங்கள் எடுத்தது. தலைவர் ரஜத் படிதார் பொறுப்புடன் ஆடி 51 ஓட்டங்கள் எடுத்தார்.

197 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவரில் 146 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

Advertisement

இதன்மூலம் 50 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில், சிஎஸ்கே அணிக்காக அதிக ஓட்டங்கள் எடுத்த சுரேஷ் ரெய்னாவின் சாதனையை எம்.எஸ்.தோனி முறியடித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிக ஓட்டங்கள் எடுத்தவர் பட்டியலில் சுரேஷ் ரெய்னா முதலிடத்தில் உள்ளார்.

Advertisement

இந்நிலையில்  தற்போது ரெய்னாவின் சாதனையை எம்.எஸ்.தோனி முறியடித்து எம்.எஸ்.தோனி 204 இன்னிங்சில் 4,699 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version