சினிமா

தந்திரமான கேள்வி எழுப்பிய ரசிகர்.. நடிகை சமந்தாவின் கலக்கல் பதில்

Published

on

தந்திரமான கேள்வி எழுப்பிய ரசிகர்.. நடிகை சமந்தாவின் கலக்கல் பதில்

உழைப்பால் உயர்ந்த பிரபலங்களில் ஒருவர் நடிகை சமந்தா. சினிமாவில் கடின உழைப்பை போட்டு முன்னேறி வந்த இவர் உடல்நிலை குறைவால் இடையில் சினிமாவை விட்டு விலகி இருந்தார்.தற்போது மீண்டும் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், கடைசியாக சமந்தா நடிப்பில் சிடாடல் என்ற வெப் தொடர் வெளியாகி இருந்தது, இதில் சமந்தாவின் நடிப்பு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.அதை தொடர்ந்து, பல படங்களில் கமிட் ஆகி உள்ளார். சமீப காலமாக சமந்தா பேமிலி மேன் வெப் சீரிஸ் இயக்குநர்களில் ஒருவரான ராஜ் நிடிமொருவுடன் நட்புடன் நெருக்கமாக பழகி வருகிறார்.இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள வனவிலங்கு உயிரியல் பூங்காவை சுற்றி பார்த்து அங்கே எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமந்தா அவரது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.அப்போது ரசிகர் ஒருவர் அவரிடம் இந்த புகைப்படங்களை எடுத்த நபர் யார் என்று தந்திரமான ஒரு கேள்வியை எழுப்ப அதற்கு, சிட்னி சுற்றுலா கைடான நவோமி என்பவர் தான் இந்த புகைப்படங்களை எடுத்தது என்று அதிரடியாக பதிலளித்துள்ளார்.    

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version