இலங்கை

முற்றுகையிடபட்ட போலி இலக்கத் தகடு தயாரிக்கும் நிலையம் ; சிக்கிய சந்தேக நபர்

Published

on

முற்றுகையிடபட்ட போலி இலக்கத் தகடு தயாரிக்கும் நிலையம் ; சிக்கிய சந்தேக நபர்

சீதுவ பொலிஸ் பிரிவின் நீர்கொழும்பு வீதியில் உள்ள சீதுவ பகுதியில் போலி இலக்கத் தகடு தயாரிக்கும் நிலையத்தை முற்றுகையிட்டதில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாலானா மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று (29) காலை இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

Advertisement

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சியம்பலகஹவத்த, சீதுவ பகுதியைச் சேர்ந்த 56 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரிடமிருந்து 03 போலி இலக்கத் தகடுகள், மோட்டார் போக்குவரத்துத் துறையின் இலக்கத்துடன் கூடிய ஸ்டிக்கர் தாள்,  மற்றும் இலக்கத் தகடுகளைத் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு ஸ்டிக்கர் தாள் உள்ளிட்ட பொருட்களை  பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

வாலானா மத்திய ஊழல் தடுப்புப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version