விளையாட்டு

41 அணிகள் பங்கேற்கும் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி: கோவையில் தொடக்கம்

Published

on

41 அணிகள் பங்கேற்கும் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி: கோவையில் தொடக்கம்

கோவை மாவட்டத்தில் இன்று (மார்ச் 29) மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி விமரிசையாக தொடங்கியது.தமிழ்நாடு கூடைப்பந்து கழகம் மற்றும் கோவை மாவட்ட கூடைப்பந்து கழகம் ஆகியோர் இணைந்து 16 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான மாநில அளவிலான கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியை இன்று தொடங்கினர். கோவை நேரு விளையாட்டு அரங்கத்தில் தொடங்கிய இந்த போட்டியில் நெல்லை, நீலகிரி, பெரம்பலூர், ஈரோடு, சேலம், திண்டுக்கல், தேனி மற்றும் கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 41 அணிகள் கலந்து கொண்டன.இன்றைய தினம் தொடங்கிய இந்தப் போட்டி, ஏப்ரல் 2-ஆம் தேதிவரை நடைபெறுகிறது. இதில் முதல் மூன்று நாட்களுக்கு லீக் போட்டிகளும், கடைசி இரண்டு நாட்களுக்கு நாக்-அவுட் போட்டிகளும் நடைபெறவுள்ளன.இந்தப் போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு கோப்பை வழங்கப்படுவதுடன், தமிழ்நாடு அளவிலான அணியில் விளையாட 12 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் ஏப்ரல் 8-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை புதுச்சேரியில் நடைபெறும் தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியில் கலந்து கொள்வார்கள் என போட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.செய்தி – பி. ரஹ்மான்

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version