சினிமா

நடிகை திரிஷா போல் உடலை ஃபிட்டா வெச்சிருக்க இதை செஞ்சா போதும்!! அப்படி மாறிடுவீங்க..

Published

on

நடிகை திரிஷா போல் உடலை ஃபிட்டா வெச்சிருக்க இதை செஞ்சா போதும்!! அப்படி மாறிடுவீங்க..

தமிழில் மெளனம் பேசியதே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி தற்போது டாப் நடிகையாக திகழ்ந்து பிஸியாக நடித்து வருபவர் நடிகை திரிஷா.முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த திரிஷா இடையில் மார்க்கெட் இல்லாமல் போக, 96 மற்றும் பொன்னியின் செல்வன் போன்ற படங்களின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார்.அவர் நடிப்பில் தக் லைஃப், குட் பேட் அக்லி, சூர்யா45, விஸ்வரம்பரா, ராம் உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாகவுள்ளது. இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் திரிஷா, தற்போது அவர் எப்படி ஸ்லிம்மாக ஃபிட்டாக இருக்கார் என்ற தகவலை அவரே கூறியிருக்கிறார்.அதில், தினசரி உணவு முறையை கவனமாக திட்டுமிடுவதால் உடல் ஃபிட்டாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க முடிகிறது. தன் உடலையும் சருமத்தையும் ஆரோக்கியமாக வைக்க முறைப்படுத்தப்பட்ட பழக்கங்களை பின்பற்றுகிறாராம் திரிஷா.சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிடுவது மட்டுமின்றி, அது தன் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குமா என்று கவனம் செலுத்துகிறேன்.எளிமையான, அழகான உடலமைப்பை பெற, உணவில் சரியான சத்துக்களை சேர்ப்பது அவசியம். உடலில் நீர் சீராக இருக்க, டாக்ஸின்களை வெளியேற்ற, தினசரி குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் குடிக்கிறேன்.புரதம், நார்ச்சத்து, சுறுசுறுப்பான சத்துக்கள் நிறைந்த உணவுகளை உணவில் சேர்க்கிறேன். சிறுதானியங்களான பயறுகள், ஓட்ஸ் உணவுகளை உட்கொண்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.இஞ்சி, மஞ்சள், புதினா, மற்றும் மல்லி போன்றவை உடலை டிடாக்ஸ் செய்யவும், அழகான தோலைப் பராமரிக்கவும் உதவுவதால் அதை தினமும் செய்கிறேன்.எண்ணெய் பொரிக்கப்பட்ட உணவுகள், மிதமிஞ்சிய சர்க்கரை சேர்த்த பானங்கள் உடல் பருமனை உண்டாக்குவதால் அதை தவிர்க்க வேண்டும் என்று திரிஷா கூறியிருக்கிறார். இதை நீங்களும் செய்தால் திரிஷா போல் ஃபிட்டாக உடலமைப்பை பெறலாம்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version