உலகம்

மகிழுந்துகளுக்கான விலையை அதிகரிக்கக் கூடாது – ட்ரம்ப் எச்சரிக்கை!

Published

on

மகிழுந்துகளுக்கான விலையை அதிகரிக்கக் கூடாது – ட்ரம்ப் எச்சரிக்கை!

வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் மகிழுந்துகளுக்கான வரியானது 25 சதவீதம் அதிகரித்துள்ள காரணத்தால் உள்நாட்டில் மகிழுந்துக்கான விலையை அதிகரிக்கக் கூடாது என அமெரிக்காவில் உள்ள மகிழுந்து நிறுவனங்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். 
 
ட்ரம்ப் பதவியேற்றதன் பின்னர் நாட்டின் செலவுகளை குறைப்பதற்காக பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறார். 
 
அந்த வகையில் கனடா, இந்தியா, சீனா, மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து , அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யும் மகிழுந்துகளுக்கு 25 சதவீத வரியை ட்ரம்ப் விதித்துள்ளார். 
 
இந்நிலையில் உள்நாட்டு மகிழுந்துகளுக்கான விலையை மகிழுந்து நிறுவனங்கள் அதிகரிக்க கூடாது என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 
 
மேலும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் தனது செயற்பாடுகளுக்கு உள்நாட்டு நிறுவனங்கள் ஒத்துழைக்க வேண்டுமெனவும், இதன் மூலம் உள்நாட்டு உற்பத்தியும், விற்பனையும் அதிகரிக்க முடியும் எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version