சினிமா

இரவு நேரத்தில் கூட, யாரும் சந்தேகப்பட மாட்டார்கள். நடிகை மஞ்சு வாரியர் ஓபன் டாக்

Published

on

இரவு நேரத்தில் கூட, யாரும் சந்தேகப்பட மாட்டார்கள். நடிகை மஞ்சு வாரியர் ஓபன் டாக்

மலையாள திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் மஞ்சு வாரியர். இவர் தமிழில் அசுரன், விடுதலை, துணிவு ஆகிய படங்களில் நடித்துள்ளார். அடுத்ததாக Mr.X திரைப்படத்தில் நடித்து வருகிறார்.மஞ்சு வாரியர் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள திரைப்படம் லூசிஃபர் 2: எம்புரான். இப்படத்தில் மஞ்சு வாரியரின் நடிப்பு அனைவரையும் மிஞ்சிவிட்டது என விமர்சனங்கள் எழுந்துள்ளது.முதல் பாகத்தை தொடர்ந்து இப்படத்திலும் தனது நடிப்பால் மிரட்டியுள்ளார் மஞ்சு வாரியர். எம்புரான் படத்தின் போது ஒரு பேட்டியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் புகழ் உங்களை மக்களிடமிருந்து ஒதுக்கி வைக்கிறதா என மஞ்சு வாரியரிடம் கேள்வி கேட்கப்பட்டது.அதற்கு அதிரடி பதிலளித்த மஞ்சு, “நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என என்னால் சொல்ல முடியும், அதுதான் நான்.குறிப்பாக கேரளாவில் யாருக்கும் நான் அந்நியமானவள் அல்ல, யார் வீட்டையும் எந்த நேரத்திலும் அது இரவாக இருந்தாலும் கூட என்னால் கதவை தட்டி தண்ணீர் கேட்டு வாங்கி குடிக்க முடியும். அதற்கு ஏன் என்று கூட கேள்வி கேட்ட மாட்டார்கள், சந்தேகமும் பட மாட்டார்கள்” என்று கூறியுள்ளார்.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version