சினிமா

நடிகை ராஷ்மிகா அழகின் ரகசியம் இவர்கள் தான்.. இது தெரியாம போச்சே!

Published

on

நடிகை ராஷ்மிகா அழகின் ரகசியம் இவர்கள் தான்.. இது தெரியாம போச்சே!

எந்த மொழியில் படங்கள் நடித்தாலும் மாஸ் ஹிட் படத்தை கொடுத்து கலக்கி வருபவர் நடிகை ராஷ்மிகா. கன்னட சினிமாவில் தொடங்கிய அவரது பயணம் தெலுங்கு, தமிழ் இப்போது பாலிவுட் என உயர்ந்து கொண்டே செல்கிறது.National Crush என்ற பெயருக்கு ஏற்ற வகையில் இந்திய சினிமா ரசிகர்களை கவர்ந்து வருகிறார். கடைசியாக இவரது நடிப்பில் ஹிந்தியில் சாவா என்ற படம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தியது.அதை தொடர்ந்து, சல்கான் கானுடன் ராஷ்மிகா ஜோடியாக நடித்த சிக்கந்தர் படம் நேற்று வெளியானது.இந்நிலையில், நடிகை ராஷ்மிகா அழகின் ரகசியம் குறித்து ரசிகர் ஒருவர் அவரிடம் இன்ஸ்டா பக்கத்தில் கேள்வி எழுப்ப அதற்கு அவர் அளித்த பதில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.அதில், “உண்மையான மற்றும் அன்பான நல்ல மக்கள் என்னை சுற்றி இருப்பது என் மனதையும் இதயைத்தையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.அவர்கள் தான் என் சருமத்திற்கு சிறந்த தோல் மருத்துவர்கள். அதுமட்டுமின்றி, அப்பா மற்றும் அம்மா அவர்களின் நல்ல மரபணுக்களின் ஆசீர்வாதம் தான் இந்த அழகின் ரகசியம்” என்று கூறியுள்ளார்.      

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version